செல்போன் மூலம் தங்களை தாங்களே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் 'செல்பி' மோகம், தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இது அவ்வப்போது விபரீதத்தில் முடிவதும் உண்டு. அந்தவகையில் அமெரிக்காவில் நடந்த விமான விபத்து ஒன்றுக்கும், செல்பி மோகமே காரணம் என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் அல்லது எங்குமே செல்லாமல் வீட்டில் வெட்டியாக இருந்தாலுமே ஒரு செல்ஃபி எடுத்து வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்வது வழக்கமாகிவிட்டது.
உணவு உண்ணும் நேரத்தைக்கூட செல்ஃபி பிரியர்கள் விட்டுவைப்பதில்லை. இப்படிப்பட்ட செல்ஃபி பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக(!) அறிமுகமாகியுள்ளது 'செல்ஃபி ஸ்பூன்'. அமெரிக்காவைச் சேர்ந்த சின்னமன் டோஸ்ட் க்ரன்ச் (Cinnamon Toast Crunch) என்ற தானியத் தயாரிப்பு நிறுவனமான General Millsன் புதிய அறிமுகம் இது.
30 அங்குல நீளமுள்ள இந்த செல்ஃபி ஸ்டிக்கின் ஒரு முனையில் ஸ்பூனும் மற்றொரு முனையில் செல்போனை வைப்பதற்கான இணைப்பும் உள்ளது. SelfieSpoon.com என்ற இணையதளத்தில் செல்ஃபி ஸ்பூனை இலவசமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். கண்களைத் தேய்க்காதீர்கள்..! இலவசமாகத்தான்.. ஆனால், அமெரிக்காவிலிருந்து இங்கு கொண்டு வருவதற்கான பயணக்கட்டணம் மட்டும் செலுத்த வேண்டிவரும்.
இனிமேல் நம் ஸ்டைலீஷ் தமிழர்கள் சோறு , இட்லி, தோசையைக்கூட ஸ்பூனில் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள்!
0 Comments