Subscribe Us

header ads

சிரியா அதிபர் ஆசாத் ரஷ்யாவுக்கு திடீர் பயணம்...

சிரியாவின் அதிபர் பஷர் அல் ஆசாத் திடீர் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த அதிபர் பஷர் அல் ஆசாத், சிரியாவில் தனது பலத்தை அதிகரிக்க உதவிய ரஷ்யாவின் சமீபத்திய ராணுவ தாக்குதல்களுக்கு பஷர் அல் ஆசாத் நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்கிழமை) மாலை இவ்விரு தலைவர்களின் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ரஷ்யாவின் ராணுவ உதவி இல்லாமல் போயிருந்தால், சிரியாவில் மேலும் பல பகுதிகளுக்கு பயங்கரவாதம் பரவியிருக்கும் என்றும் அதிபர் ஆசாத் கூறியுள்ளார்.

சிரியாவில் நிலவும் பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு உதவுவதைத் தாண்டி, சிரியாவின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணவும் ரஷ்யா உதவும் என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கிய பிறகு கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு அதிபர் ஆசாத், முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments