Subscribe Us

header ads

அடங்காத சல்மான்கானை அடக்கியவர் இவர்தான்!

நடிகர் சங்க தேர்தல் , சரத் - விஷால் மோதல் , விஜய் ரசிகர்களின் பொலிஸ் முறைப்பாடு என கோலிவுட் ஒருபுறம் இயங்கிக்கொண்டிருக்கின்றது.


மறுபுறத்தில் பொலிவுட், கான்களின் செய்திகளால் பரபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

'கான்கள் ' என்றவுடனேயே சல்மான் கானுக்கு அதில் முக்கிய இடமுண்டு.

வசூல் சக்கரவர்த்தி என்ற பெருமைக்குரிய சல்மான், நீண்டநாட்களாக திருமணமாகாமல் தனியாக இருப்பது பலருக்கு கவலையாகவே இருந்தது.

பல பெண்களுடன் ஊர்சுற்றித்திருந்த போதும், பெண்கள் பலர் அவரை சுற்றி வந்த போதிலும் , இன்னும் தனிச் சிங்கமாகவே அவர் வலம் வருகின்றார்.

இந்நிலையில், சல்மானுக்கும் விரைவில் திருமணம் நடக்குமென அரசல் புரசலாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் , சல்மான் ரோமானிய தொலைக்காட்சி நடிகையான லுலியா வன்டூரை திருமணம் செய்யவுள்ளாராம். அவரை தனது குடும்பத்தினருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளாராம் சல்மான்.

அதுமட்டுமன்றி திரைப்பட படப்பிடிப்புகளிலும் லுலியா வன்டூர் அடிக்கடி காணப்படுகிறாராம்.

எனவே விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments