Subscribe Us

header ads

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்வேன்- முதலமைச்சர் உறுதி

கிழக்கு மாகாண முதலமைச்சர் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு சில இடங்களில் ஏற்பட்டுள்ள குறைகள், தேவைப்பாடுகளைக் கேட்டறிந்து கொண்டார். 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் வேண்டுகோளுக்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சர் நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.  இதன்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபிருடன் கேட்டறிந்துகொண்டார். 

இங்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மிக விரைவில் இதற்கான தீர்வை பெற்றுத் தருவதாகக் கூறியதுடன் வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகளையும் ஆளணிப் பற்றாக்குறையையும் எழுத்து மூலம் தனக்கு உடனடியாக வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

-CM MEDIA-

Post a Comment

0 Comments