அபு அலா –
கிழக்கு மாகாண முதலமைச்சரின் வழ ிகாட்டலின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச சபை நடாத்திய சுற்றுச் ச ூழல் தூய்மைப்படுத்தும் நிகழ்வு இன்று (16) காலை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ .எல்.எம்.நஸீரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.கலீல் றஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கலந்துகொண்டு இந்த சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்து ம் நிகழ்வை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அட்டாளைச்சேனை சபைக்குட்பட்ட பாலமுனை, ஒலுவில், அட்டாளைச்சேனை போன்ற பகுதிகளில் இன்றைய நாள் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வில் உள்ளூராட்சி மாகாண ஆணையாளர் எம் .வை.எம்.சலீம், அம்பாறை மாவட்ட பிராந்தி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


0 Comments