Subscribe Us

header ads

தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சவூதி அரேபியாவில் ரியாத் நகரில் போலிசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் நிகழவிருந்த பாரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சவூதி அரேபியாவில் ரியாத் நகரில் போலிசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் வெடிகுண்டு ஒன்று சிக்கியதாகவும் அது செயலிழக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ரியாத் வாழ் பொதுமக்களை இலக்கு வைத்து வெடிக்கவைக்க கொண்டுவரப்பட்ட குறித்த வெடிகுண்டை சவூதி பொலிசார் கைப்பற்றியதுடன் ரியாத் நகரில் விஷேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதன்போது தீவிரவாத குழுவை சேர்ந்த ஒருஆண் ,பெண் என இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.இவர்கள் இருவரும் தற்கொலை குண்டு தாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை ரியாத் நகரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் இவர்களுடன் வெடிபொருட்கள் பலவும் சிக்கியுள்ளதாக சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட தீவிரவாதிகளில் ஒருவர் சிரிய நாட்டில் இருந்து இரண்டாயிரத்து பத்தில் சவுதிக்கு வந்தவர் எனவும் மற்றையை பெண் பிலிப்பின்ஸ் நாட்டில் இருந்து சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments