ஆபத்துக்களில் இருந்து சிறுவர்களை பாதுக்கும் வகையில் மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புனர்வை ஏற்படுத்துவம் வகையில் மன்னார் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிர்ப்புனர்வு ஊர்வலம் இன்று காலை மன்னாரில் இடம்பெற்றது.
மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ தலைமையில் மன்னார் நீதிமன்ற பிரதான வீதியில், காலை 10.30 மணியளவில் விழிர்ப்புனர்வு ஊர்வலம் ஆரம்பமாகியது.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுவர்களை ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் வகையிலும், சிறுவர்களுக்கு எவ்வாறான வகையில் ஆபத்துக்கள் ஏற்படுகின்றது என்பதனை தெளிவுபடுத்தும் வகையில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
மன்னார் நீதிமன்ற வீதியில் ஆரம்பமான குறித்த ஊர்வலம் மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது. பின்னர் பஸார் பகுதியில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட குறித்த பதாதைகளை காட்சிப்படுத்திய நிலையில் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் காணப்பட்டனர்.
குறித்த ஊர்வலத்தில் மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள், கிராம மட்ட பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். குறித்த ஊர்வலம் முடிவடைந்த நிலையில் அங்கு உரையாற்றிய மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிக்கோ,
சிறுவர்களுக்கு பல்வேறு விதமாக உயிர் ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
விபத்துக்களில் மாட்டிக் கொள்ளுகின்றனர் அல்லது வீடுகள் மற்றும் பொது இடங்களில் காணப்படும் கிணறுகில் வீழ்ந்து ஆபத்துக்களை தேடிக்கொள்கின்றனர். இவ்வாறு சிறுவர்கள் பல்வேறு விதத்தில் ஆபத்துக்களை தேடிக்கொள்ளுகின்றனர்.
இந்த விடயத்தில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. மக்களின் பராமரிப்புக்கள் அற்ற கிணறுகள் மாவட்டத்தில் காணப்படுகின்றது.
அக்கிணறுகளை அடையாளப்படுத்தி சுற்று வேலிகள் அடைக்க வேண்டும். விபத்துக்கள் ஏற்படாத வகையில் சிறுவர்களை வீதிகளில் நடமாட அனுமதிக்க வேண்டும்.
இவ்விடயத்தில் பெற்றோர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த ஊர்வலத்தில் மன்னார் வீதிப்போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி குணசேகர, மாவட்ட வீதிப்போக்குவரத்து பொறுப்பதிகாரி சேனக்க, மன்னார் பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்புப்பிரிவு பொறுப்பதிகாரி அபேய விக்கிரம ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments