Subscribe Us

பாடசாலை மாணவர்களுக்கு பாபுல் விற்பனை செய்த இருவர் கைது

கண்டி திகண பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பாபுல் என்ற போதைப்பொருளை விற்பனை செய்து வந்த இருவரை தெல்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2460 கிராம் பாபுல் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்களும் திகணகும்புக்கந்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிசாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரு நபர்களை தெல்தெனிய நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments