Subscribe Us

ஒரு நாளில் ஓர் அவலம்


அகதி எனும் பட்டம் பெற்று
கால் நூற்றாண்டு
கனவு போல் கலைந்தும் விட்டது
கடந்து விட்டது
ஒரு நாள் அவகாசம்,
உறையுளை விட்டு நீங்க
ஒதுக்குப் புறமாய் இருக்க
ஒப்பாரி வைத்து அழவும் நேரமில்லை
அன்று பிறந்த பிள்ளை,
உரிமையுமில்லை அழக் கூடத் தெரியாத
குமரியான பெண்,
பிரசவ வலியில் தாய், பிரசவித்த தாய்,
என் மக்கள் அன்று
மரணத் தருவாயில் ஒரு முதியவள், இன்னும் பல... கால்களை நம்பவில்லை
கண்ணீரும் கரைந்தது
கடலை நம்பினார்கள். காரணம் கடத்தி விட்டவள் அவள்தான் கடலிலும் மழையிலும்.
திசையறியா பயணம்
படகுதான் அன்று என் மக்களின் இரண்டாம் கருவறை காரணம் கணத்தவள் அவள்தான் நடுநிசியிலும் கூட,
அன்றுதான் உணரப்பட்டது.
படகுக்கும் புத்தளத்திற்கும் அவ்வளவு பாசம் கரை தட்டியது அங்கேதான் ஹிஜ்ரத்தின் செயல் வடிவம் அன்சாரியீன்கள்
உறங்க உறையுளில்லை,
அழகானவர்கள் அப்பாவிகள் அனுசரிக்க அவர்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். உண்ண உணவில்லை, உடுத்த உடையில்லை, ஆனால்
காட்டுமென்பதில்
உணர்விழந்த உடலிருந்தது. மன்னிக்கவும், உடல் மட்டும்தான் இருந்தது. சமூகத்திற்கோர் சங்கடமென்றால் சகோதரத்துவம் சமிக்ஞை ஐயமில்லை ஆனால்
காறி உமிழ்கிறது.
அகதி எனும் முத்திரைதான் இன்னுமே முள்ளாய் குத்துகிறது, அது வலிகளின் செல்லப் பிள்ளை வார்த்தைகளில் கேவலம் கனவுகளில் கூட கச்சிதமாய் வந்து துடைத்தெறியக் கூட
எனது தாயக்குலம்தான்
முடியவில்லை அது கறைகளின் தாய். வடக்கில் பிறந்த ஒவ்வொரு ஆண் மகனும் மனதாலும் தைரியசாலிதான் ஆம், வலிகளை எண்ணி அடுத்தவன் முன் அழுது கண்டதில்லை இன்றுவரை சாதனைப் பெண்கள்,
இரத்தங்களால் எழுதப்பட்டு
வேதனைகளும் சோதனைகளும் வாட்டிய போதும் போதனை போல புன்னகையோடு வரவேற்று வாழ்க்கை நடாத்தியவர்கள். எங்கள் வாழ்க்கை வரலாற்றில் கறைபடிந்தவை, இலங்கை எனும் புத்தகத்தில்
மட்டும்தான்
மறக்கடிக்கப்பட்ட பக்கங்கள் அவை அரசியலில் இருந்து கொண்டு அறிக்கை விடக்கூட என் மக்கள் கணக்கிலில்லை, இவர்கள் சமூகம் சமூகம் என்று கூவும் நாடகம் ஓட்டுகளென்னும் பிச்சைக்காக வலிக்கவில்லை,
இலங்கை எங்கள் தாய்நாடு”
வலிகள் பழகி விட்டது, பழக்கியும் விட்டார்கள். கருணையுள்ள இறைவன் கூடவே இருக்கிறான் அவன் போதும் ஆனால் ஒன்று மட்டும் உறுதி என் இனத்தின் இறுதி உயிரும் சொல்லும் “வடக்கு எங்கள் தாயகம் என்று ஏ.எம்.மொஹமட் அனீஸ்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்.
முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடம்,

Post a Comment

0 Comments