Subscribe Us

header ads

குண்டுகளை வெடிக்க வைத்தவர்களும் ஆயுதங்களால் குற்றச் செயல்களை புரிந்தவர்களுமே சிறைச்சாலைகளில் தடுப்புக் காவலில் உள்ளனர்.

குண்டுகளை வெடிக்க வைத்தவர்களும் ஆயுதங்களால் குற்றச் செயல்களை புரிந்தவர்களுமே சிறைச்சாலைகளில் தடுப்புக் காவலில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ அரசியல் கைதிகள் எவரும் இலங்கையில் கிடையாது என்றும் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ மேலும் கருத்து தெரிவிக்கையில் வட மாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறுவது போல் எமது சிறைகளில் அரசியல் கைதிகள் எவரும் தடுப்புக்காவலில் இல்லை.
தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டோரும். ஆயுதங்கள் மூலம் குற்றச் செயல்களை புரிந்தவர்களுமே சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறு, சிறு குற்றங்களை புரிந்த தமிழ் கைதிகள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடும் குற்றங்கள் புரிந்த ஒரு சில தமிழ் கைதிகளே இன்னும் தண்டனை அனுபவிக்கின்றனர்.
இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள். 
நீதி அமைச்சினால் இவர்களை விடுதலை செய்யவும் முடியாது. அவ்விடயத்தில் தலையிடவும் முடியாது. இது தொடர்பாக அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
அத்தோடு இவ்விடயம் நீதி அமைச்சுடன் தொடர்பு பட்டதல்ல.
சிறைச்சாலைகள் மற்றும் புனர் வாழ்வு சட்டம் ஒழுங்கு அமைச்சிற்கு உரியது. 
எனவே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்ற வடமாகாண முதலமைச்சரின் கருத்தை ஏற்க முடியாது.
மீண்டும் நான் வலியுறுத்துவது இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது என்பதனையே ஆகும் என்றும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments