Subscribe Us

header ads

சிறுநீரக நோயை போக்கும் காக்கட்டான் (சங்கு பூ)

சங்கு போன்ற அமைப்பில் பூ இருப்பதால் நீல நிற பூக்கள் பூக்கும் இந்த தாவரம் சங்கு கொடி என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் அலங்காரக் கொடியாகவே வீடுகளில் படரவிடப்படுகிறது. ஆயினும் இந்தக் கொடிவகைத் தாவரம் சிறந்த மருத்துவ குணங்களையும் அடங்கியது. காக்கரட்டான் விதைகள் மணம் உடையதாகவும் புளிப்புச்சுவையுடன் இருக்கும்.

இதன் குணம் சிறுநீர் பெருக்குதல், குடற் பூச்சிக் நீக்குதல், பேதி, வாந்தி, தும்மல், உண்டாக்குதல், நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும். நீண்ட நாள் கப நோய்களுக்கு காக்கரட்டான் பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து சிறிதளவு எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வர எளிதில் நிவாரணம் கிடைக்கும்.

காக்கட்டான் வேர்ப் பட்டையை ஊற வைத்த நீரை கால் டம்பளர் அருந்தி வர, சிறுநீரக நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல், வலி முதலிய நோய்களும் குணமாகும். மேலும் இந்த கொடியின் இலைகள் ஞாபக சக்தியை புத்திசாலித்தனத்தை வளர்க்கும் சக்தி கொண்டது. நரம்பு சம்பந்தமான குறைகளையும் போக்கும். இதன் இலைச்சாறு வயிறு உப்புசத்தை போக்கும். தொண்டை புண்ணை ஆற்றும்.

Post a Comment

0 Comments