புத் /விருதோடை முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவி முஸ்லிஹா முனீர் 173 புள்ளிகள் பெற்று புத்தளம் மாவட்டத்தில் 9ம் இடத்தை அடைந்து இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார் (அல்ஹம்துலில்லாஹ் ) .
இவர் புத்தளம் அக்கரைப்பற்று ஜம் இய்யதுல் உலமா கிளைத் தலைவரும் முன்னாள் ஒய்வு பெற்ற அரச பாடசாலை அதிபருமான அஷ் ஷைஹ் ஷரீப் ( காஸிமி ) அவர்களின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது .
இம்மாணவியின் வெற்றிக்கு அருள்புரிந்த இறைவனுக்கும் , இப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்துவதோடு இம்மாணவியின் எதிர்காலக் கல்விப் பயணம் சிறப்பாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
தகவல் : அஷ் ஷைஹ் அப்துல்லாஹ் ஷரீப் (காஸிமி) B.A.Hons(Madinah)
0 Comments