சவூதி அரேபியாவில் தொழில்புரியும் பெண்கள் தலையை மறைக்காமல் பணியில் இருந்தால் அவர்களுக்கு ஆயிரம் சவூதி ரியால் அபராதம் விதிக்கபடும் என அந்த நாட்டு தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் அலுவலகங்கள் மற்றும் பணி புரியும் இடங்களில் பணி நேரத்தில் பெண்கள் தலையை மறைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள அதேவேளை மீறுபவர்களுக்கு ஆயிரம் சவூதி ரியால் அபராதமும் தொழில் தருனருக்கு ஐயாயிரம் சவூதி ரியால் அபராதமும் இது தொடர்பாக சவூதி தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு நாளிதழ் அல் ஹயாட் செய்தி வெளியிட்டுள்ளது.
இரவு வேளைகளில் பெண்களை கட்டாய பணியமர்த்தும் தொழில் தருனர்களுக்கு தருனருக்கு ஐயாயிரம் சவூதி ரியால் அபராதமும் பெண்களுக்கு தனியாக ஒரு பகுதியை வழங்காத தொழில் தருனர்களுக்கு தருனருக்கு பாத்தாயிரம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்படவுள்ளது.
சவூதி அரேபியாவில் பெண்கள் இஸ்லாமிய வரையறைக்கு உற்பட்ட ஆடை அணிந்தே போது இடங்களில் செல்ல வேண்டும் என்ற சட்டம் உள்ளது இந்த நிலையில் பணி புரியும் இடங்களிலும் இது அமலுக்கு வந்துள்ளது.
0 Comments