Subscribe Us

header ads

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட எவரும் தப்பிக்க முடியாது!– அமைச்சர் ரங்கே பண்டார

லஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட எவரும் தப்பிக்க முடியாது என அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

யாரிடமும் கை ஏந்தாமல் வாழ வேண்டும் என்பதற்காக நாம் தொழில் செய்கின்றோம்.

எனினும் சிலர் தங்களது தொழிலையும் குடும்பத்தின் பெயரையும் கெடுத்துக் கொண்டு லஞ்சம் பெற்றுக்கொள்கின்றனர்.

லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழு செயற்படவில்லை என எமது தரப்பினரே குற்றம் சுமத்தினர்.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மீளவும் நியமிக்கப்பட்ட மூன்று தினங்களில் நாட்டின் மிகப் பெரிய லஞ்ச ஊழல் மோசடியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமக்கு தேவையான அளவிற்கு சம்பாதித்து தேவையற்ற செலவுகளை குறைத்தால் இவ்வாறு லஞ்சம் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை.

எவ்வாறெனினும் எதிர்காலத்தில் அனைத்து ஊழல் மோசடியாளர்களும் சிக்குவார்கள்.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு பணியை ஆரம்பித்துள்ளன, இனி எவருக்கும் விடுதலை கிடையாது என இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments