உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மறுசீரமைப்பு தொடர்பில் எழுந்துள்ள குறைகளைக் களைய ஐவர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை தொகுதி வாரி அடிப்படையில் நடத்துவதற்கு ஏதுவாக உள்ளூராட்சி மன்றங்களின் புதிய எல்லை நிர்ணய அறிவிப்பு அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.
எனினும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் இந்த எல்லை மறுசீரமைப்பு விடயத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டி எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அவ்வாறான குறைகளைக் களைந்து எல்லை மறுசீரமைப்பு தொடர்பில் திருத்திய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடும் வகையில ஐவர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
இக்குழுவின் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை தொகுதி வாரி முறையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உள்ளூராட்சி , மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
0 Comments