யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தில் வல்வெட்டித்துறை, தெணியம்பை பகுதியில் வெள்ளைநிற நாகபாம்பொன்று இன்று அகப்பட்டுள்ளது.
குறித்த நகர் பகுதியிலுள்ள வீதியொன்றிலிருந்த இந்த வெள்ளை நிற நாகபாம்பினை அப்பகுதி மக்கள் பிடித்து போத்தலில் அடைத்துள்ளனர்.
பின்னர் இந்த வெள்ளை நாகம் வல்லிபுர ஆழ்வார் ஆலயப் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


0 Comments