இவ்வருடத்தின் கடந்த 9 மாத காலத்துக்குள் மாத்திரம் முகநூல் பக்கம் தொடர்பில் 2 ஆயிரம் முறைப்பாடுகள் இலங்கையர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக கணனி அவசர இணைப்புப் பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடுகளில் நூற்றுக்கு 60 வீதமானவை பெண்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முறைப்பாடுகளில் ஒரே பெயரில் திறக்கப்பட்டுள்ள போலி முகநுால் பக்கம் தொடர்பானவை அதிகமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
“பேஸ்புக்” தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை 0112-691692 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.


0 Comments