Subscribe Us

header ads

அகதிகள் காரணமாக போல்க்கன்ஸ் பிராந்தியத்தில் பதற்றம்

மேற்கு ஐரேப்பிய நாடுகளுக்கு போல்க்கன்ஸ் பிராந்தியத்தின் ஊடாக செல்லும் ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரோசியாவில் இருந்து ஸ்லோவேனியாவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட பலர் நேற்று முன் தினம் இரவு கடுங்குளிரினால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குரோசிய எல்லையுடனான ஸ்லோவேனியாவுக்குச் செல்லும் அகதிகள் தடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஏற்கனவே குரேசியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமில் உள்ள அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் எதிர்வரும் ஓரிரு நாட்களில் அவர்களை சமாளிப்பது மிக கடினம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு இடைக்கால தீர்வொன்றை ஏற்படுத்தும் நோக்கில் குரோசியா நாளாந்தம் ஐந்தாயிரம் அகதிகளை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டியுள்ளது.

அதனை மறுத்துள்ள ஸ்லோவேனியா அவர்களின் கோரிக்கையில் ஐம்பது சதவீதமானவர்களை ஏற்றுக்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சிரியா, ஆபிரிக்கா மற்றும் ஆப்கானைச் சேர்ந்த அகதி அந்தஸ்து கோரும் ஆயிரக் கணக்கானவர்கள் போல்க்கன்ஸ் ஊடாக ஒஸ்ரியா, ஜேமனி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் செல்லும் பயணத்தை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments