Subscribe Us

header ads

சம்பவத்தின் உண்மைத்தன்மையை அறியாமல் ஊடகங்கள் பொய்களை பரப்புகின்றன ...!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளம் யுவதி ஒருவர் இளைஞர்கள் இருவரால் தாக்கப்படும் வீடியோ  வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக குறித்த வாலிபரும் யுவதியும் சம்பவம் தொடர்பாக பொலிசில் வாக்குமூலம் வழங்கியிருந்த அதேவேளை கையடக்க தொலைபேசியை திருத்த கொடுத்த கடையில் இருந்தே இந்த வீடியோ வெளியே சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த யுவதி  சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

ஒரு வருடத்துக்கு முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் எனக்கு  எந்த பிரச்சினையும் இல்லை எனவும் இது ஒரு குடும்ப தகராறு பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்தை போல் ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய தனக்கு இதில் எதுவித பிரச்சினைகளும் இல்லை என்றால் யாரும் இதனை பெரிதுபடுத்திகொள்ள வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்தின் உண்மைத்தன்மையை அறியாமல் ஊடகங்கள் பொய்யை பரப்புவதாக இவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments