(ஊடகவியலாளர் கரீம் ஏ.மிஸ்காத்)
புத்தளம் தம்பபண்ணியில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, அல் ஜெஸீரா இளைஞர் அமைப்பு, கலை கலாசார, விளையாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது, இன்நிகழ்ச்சிகள் மன்/புத்/ஆப்தீன் அ.மு.க.பாடசாலை மைதானத்தில், (வெள்ளி,சனிக்கிழமை) இரண்டு தினங்களாக நடத்தப்பட்டது. இதன் போது தம்பபண்ணி பிரதேச, பாலர் பாடசாலை மாணவர்கள், பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் மேடை ஏற்றப்பட்டன.
அத்தோடு இளைஞர்களுக்கான மரதன் ஓட்டம், கிரிக்கெட், கரப்பந்தாட்டம், மோட்டார் சைக்கில் மெதுவாக ஓடுதல், துவிச்சக்கர வண்டி ஓட்டம்,
மேலும் வயோதிபர் ஓட்டம், கயிறு இழுத்தல், 45வயதுக்கு மேல் பட்டோர் பலூன் உடைத்தல், போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள், இடம்பெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களும், விசேட அதிதியாக றிப்கான் பதியுதீனும் கலந்து கொண்டனர்.
இன்நிகழ்ச்சிகள் யாவும் முசலி பிதேச சபை, முன்னால் பிரதி தவிசாளர் பைறூஸ் தலைமையில் இடம் பெற்றது.








0 Comments