1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விடுதலைப் புலிகளினால் வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வலியுறுத்தி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு ஸாஹிரா கல்லூரிக்கு முன்பாக பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு மற்றும் தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
வடமாகாண முஸ்லிம்கள் வௌியேற்றப்பட்டு 25 வருடங்களாகியுள்ள நிலையில் அவர்களின் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

0 Comments