Subscribe Us

header ads

மழை காலத்தில் தரை மீது வரும் வெல்வட் பூச்சி நினைவிருக்குதா..... (கவிதை)

மழை காலத்தில்
தரை மீது வரும்
வெல்வட் பூச்சி
நினைவிருக்குதா?

வீதி நிறைத்து
பறந்து திறியும்
மழைக்குருவி
நினைவிருக்குதா?

கம கமக்கும்
மஹ்தூன் மாமாவின்
கடலை கரத்தை
நினைவிருக்குதா?

தையல் அலங்காரம்
வெட்டி சேர்த்த
சிந்தாமணி பேப்பர்
நினைவிருக்குதா?

துகுருஸ் பிடித்து
வென்று தோத்த
நொண்டிக் கோடு
நினைவிருக்குதா?

அஹ்ம கபீரப்பா
கடையில் வாங்கிய
காக்க சில்லு
நினைவிருக்குதா?

ஒருவாக்கி வாங்கிய
புல்டோவும் ஸ்டிகரோடு வரும்
பொன் பொன் டொபியும்
நினைவிருக்குதா?

ஐந்து சத
கோழி முட்டாசியும்
ஐம்பது சத வட்ட கொகீசும்
நினைவிருக்குதா?

- இம்தாத் பசர் -

Post a Comment

0 Comments