Subscribe Us

header ads

கொத்து ரொட்டி பார்சல் ஒன்றை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், அதனுள் தீக்குச்சி மற்றும் இறைச்சியில் அகற்றப்படாத ரோமம்

யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றின் மீது வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த உணவகத்தின் மீது பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், வழக்கும் பதிவு செய்யப்படவுள்ளது.

குறித்த உணவகத்தில் கொத்து ரொட்டி பார்சல் ஒன்றை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், அதனுள் தீக்குச்சி மற்றும் இறைச்சியில் அகற்றப்படாத ரோமம் ஆகியன உள்ளமை கண்டு குறித்த உணவகத்திற்குச் சென்று கேட்ட நிலையில் அவர்கள் அதனை மூடி மறைக்க முற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த வாடிக்கையாளர் பொதுச்சுகாதார பரிசோதகரிடம் சென்று முறைப்பாடு கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த உணவகம் இன்று மாலை சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் வழக்கும் பதிவு செய்யப்படவுள்ளது.

FAROOK SIHAN

Post a Comment

0 Comments