Subscribe Us

header ads

கனடிய நாட்டு குடிமகள் ஆவதற்கு இஸ்லாமிய முகத்திரை தடை : இருந்தும் வெற்றி கண்டார் முஸ்லிம் பெண்மணி

கனடிய நாட்டு குடிமகள் ஆவதற்கு இஸ்லாமிய முகத்திரை தடையாக இருந்ததை எதிர்த்து பெண் ஒருவர் நடத்திய தொடர் போராட்டங்களின் பலனாக தற்போது அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 


பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Zunera Ishaq (29) என்ற இஸ்லாமிய பெண் கடந்த 2008ம் ஆண்டு கனடாவில் உள்ள டோரண்டோ நகரில் குடியேறியுள்ளார்.

இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றிவரும் அவர், பெண்கள் அணியும் நிகாப் எனப்படும் முகத்திரை அணிவதை கட்டாயமாக கடைபிடித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அவர் கனடிய நாட்டு குடிமகள் ஆவதற்கு தகுதியனவராகவும், குடியுரிமை ஏற்றுக்கொள்வதற்கான அழைப்பும் அவருக்கு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், 2011ம் ஆண்டு ’இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிந்துக்கொண்டு குடியுரிமை பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது’ என ஒரு புதிய கொள்கையை கனடிய அரசு அறிமுகப்படுத்திருந்தது.

இதனை அவருக்கு சுட்டிக்காட்டிய அதிகாரிகள், நிகழ்ச்சி நடைபெறும்போது முகத்திரையை நீக்கிவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால், அதிகாரிகளின் வலியுறுத்தலை நிராகரித்த அந்த பெண், தான் முகத்திரை அணிந்துக்கொண்டு தான் குடியுரிமை பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இஸ்லாமிய பெண்கள் குடியுரிமை பெறும்போது முகத்திரை அணிந்திருப்பது கனடிய தேசிய பாதுகாப்பிற்கு ஏற்றது அல்ல என அந்நாட்டு பிரதமரான ஸ்டீபன் ஹார்பர் ஏற்கனவே வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால், முகத்திரை அணியக்கூடாது என அரசு எதிர்த்து வருவது தன் மீதான தனிப்பட்ட தாக்குதல் என்றும் இதனால் தான் பாதுகாப்பு அற்றதாக கருதுவதாக அந்த பெண் கண்டனம் தெரிவித்து பல போராட்டங்களை நட்த்தி வந்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு கடந்த பெப்ரவரி மாதம் நீதிமன்றத்திற்கு வந்தபோது, இஸ்லாமிய பெண்களின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் விதத்தில் அரசின் கொள்கைகள் இருப்பதை ஏற்க முடியாது என்பதால், முகத்திரை அணிந்து குடியுரிமை ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியது அவசியம் இல்லை என நீதிபதி தீர்ப்பளித்தார்.

தீர்ப்பினை தொடர்ந்து, நேற்று Mississauga நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் Zunera Ishaq என்ற அந்த இஸ்லாமிய பெண்ணிற்கு சட்டரீதியாக குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய அவருடைய வழக்கறிஞரான Lorne Waldman, குடியுரிமை பெறுவதற்கு சற்று முன்னர், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முகத்திரை நீக்கப்பட்டு அவரின் அடையாளங்களை பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனைக்கு பின்னர், முகத்திரை அணிந்துக்கொண்டு வந்த அந்த பெண், நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் சட்டப்பூர்வமாக குடியுரிமை பெற்றுவிட்டதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments