புனித தளத்தில் மக்பூலான துஆ
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
நேற்று மதீனாவில் இருந்து 455 ஹாஜிகள் புனித ஹஜ் கடமையை இனிதே நிறைவேற்றி நலமே மலேசியா திரும்பினார்கள்
அதில் ஜந்து வருடமாக இடது பக்கம் முற்றிலுமாக வாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாமல் இருந்த பெண்மணியும் ஒருவர்,
இவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்ற புறப்படும் போது துணையாக தன் கணவர், மகன் மற்றும் மருமகளின் உதவியுடன் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்த படி சென்றார் ....
இதோ நேற்று திரும்பும்போது யாருடைய உதவியும் இல்லாமல் தானாகவே நடந்து வந்ததைக் கண்டு குடும்பத்தார்கள் ஆச்சர்யத்துடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்..
அல்லாஹு ஸுப்ஹானஹுத் த ஆலாவின் மாபெரும் கிருபை தான் எல்லாம் என்று கண்ணீருடன் கூறிய பாத்திமா அப்துல் லத்தீஃப் என்ற அந்த பெண்மணியின் வயது 60
அவர்கள் கூறியதாவது :
எனது மகன் மற்றும் மருமகளின் உதவியோடு சர்கர நாற்காலியில் இருந்து தான் செல்ல முடியுமே தவிர என்னால் கொஞ்சமும் நடக்க இயலாது...
அப்படி இருந்த நான் கடந்த வாரம் மதீன மாநகரில் உறங்கி விளித்தபோது திடீரென்று எனது காலில் உணர்வு வந்ததை உணர்ந்து அசைத்துப் பார்த்தேன்,
அப்பொழுது நான் தங்கும் விடுதியில் இருந்தேன்,இதை என்னால் நம்பவே முடியவில்லை, இருந்தும் அப்பொழுது நான் எழுந்து இரண்டு மூன்று அடிகள் நடந்து பார்த்தேன்,பிறகு மஸ்ஜித் நபவிக்கு ஸுபுஹு தொழுகையை தொழச் சென்றேன்,
மீண்டும் மீண்டும் இது உண்மை தானா என்ற கேள்வி என்னுல் எழுந்தது,அன்று மக்கா மற்றும் அரஃபவில் கூட நான் சர்கர நாற்காலியில் தானே இருந்தேன் ,
இருந்தும் நான் ஒருபோதும் என்னுடைய துஆவின் மீதும் அல்லாஹு ஸுப்ஹானஹுத் த ஆலாவின் பேராற்றல் மீதும் நம்பிக்கை இழக்கவில்லை,
அல்ஹம்துலில்லாஹ் இதோ என்னுடைய துஆ மக்பூல் ஆனதை உணர்ந்து கண்டது மட்டுமல்ல எழுந்து நடக்கிறேன்
இனிமேல் நான் யாருக்கும் சுமையாக இருக்க மாட்டேன் எனது வேலைகளை,வீட்டு வேலைகளை கூட நானே செய்து கொள்வேன்...
அல்ஹம்துலில்லாஹ் ....


0 Comments