அதிகரிக்கும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கு தேசிய மட்டத்திலான அவசர முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்துவது குறித்து தேசிய வீதிப் பாதுகாப்புச் சபையில் நடைபெற்ற கூட்ட மொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இவ்வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் வீதி விபத்துக்களினால் 2,200 பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த வருடம் இதே மாத காலப்பகுதியில் 349 பேரே உயிர் இழந்துள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு 36,050 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவ ற்றில் 2,440 பேர் மரணித்துள்ளனர். 6,847 பேர் கடுமையான காயத்துக்குள்ளாகியுள்ளனர்.
இப்பதிவுகளை ஒப்பிட்டுப்பார்க்கையில் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான தேசிய மட்டத்திலான அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கபட வேண்டியுள்ளது.இதன் நிமித்தம், புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதுடன், வீதி விபத்துக்கள் குறி த்து மக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன் வீதிப்பாதுகாப்புக்கான தேசிய கொள்கையொன்றும் உருவாக்கப்படுவதும் நீண்டகாலத் திட்டத்தின் பிரகாரம் இக்கொள்கைத் திட்டம் முன்னெடுக்கப்படுவதும் அவசியமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள் ளார்.
எண்ணெய் கொள்களன் வாகனம் (பௌஸர்) உட்பட கனரக வாகனங்களால் ஏற்ப டும் வீதிப் போக்குவரத்து நெருசல் மற் றும் பாடசாலை போக்குவத்துச் சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்து, வான் முச் சக்கரவண்டி தொடர்பில் விசேட சட்டங்க ளும் அமுல்படுத்தப்பட வேண்டியுள்ளதாக வும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments