Subscribe Us

header ads

மலேசிய நாட்டிற்கு சொந்தமான பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணை தான் என்பதை நிரூபிக்கும் அதிர்ச்சி வீடியோ

மலேசிய நாட்டிற்கு சொந்தமான பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணை தான் என்பதை நிரூபிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்றை நெதர்லாந்து பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ளது. 

2014ம் ஆண்டு யூலை 17ம் திகதி நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டம் விமான நிலையத்திலிருந்து மலேசிய நாட்டிற்கு சொந்தமான Flight MH17 என்ற விமானம் கோலாலம்பூருக்கு புறப்பட்டுள்ளது.

போலந்து, ஜேர்மனி வழியாக சுமார் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து வந்துக்கொண்டு இருந்த அந்த விமானத்தின் பாதையில் வானிலை மோசமாக இருந்துள்ளது.

இதனை தவிர்க்க வழக்கமான பாதையை விட்டு விலகி, உக்ரைன் நாட்டின் எல்லைக்குள் நுழைந்து பறந்துள்ளது.

இதே நேரத்தில், உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் யுத்தம் நடைபெற்று வந்துள்ளது.

கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்ய ராணுவம் ஆயுதங்களை வழங்கி உதவி செய்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சியாளர்கள், தரையிலிருந்து ‘Buk’ என்ற அதிநவீன ஏவுகணை ஒன்றை செலுத்தியுள்ளனர்.

ஒலியை விட 3 மடங்கு அதிவேகத்தில் பறக்கும் அந்த ஏவுகணையானது ரேடர் மூலம் வெடிக்க கூடியது. மேலும், தாக்கவேண்டிய இலக்கின் தூரத்திற்கு மிக அருகில் வந்தவுடன் அது தானாகவே வெடிக்க கூடியது.

இந்நிலையில், ஏவுகணை செலுத்தப்பட்ட சில நொடிகளில், மலேசிய விமானம் அவ்வழியாக மிகவும் தாழ்வான உயரத்தில் பறந்து வந்துள்ளது.

விமானத்தின் முகப்பு பகுதிக்கு அருகில் ஏவுகணை கடந்தபோது, ஏவுகனையில் இருந்த ரேடர் இலக்கை அடைந்துவிட்டதாக கருதி தானாக வெடித்துள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பயணிகளும் உயிரிழந்தனர்.

ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வந்த விசாரணையில், இன்று நெதர்லாந்து பாதுகாப்பு மையம் இந்த வீடியோ காட்சியை வெளியிட்டு, மலேசிய விமானத்தை தாக்கியது ரஷ்ய ஏவுகணை தான் என நிரூபித்துள்ளது.

Post a Comment

0 Comments