ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் கடலரிப்பினால் குறித்த பிரதேச மக்கள் பாரிய ஆபத்தினை எதிர்நோக்கி வந்தனர். இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இன்று அப்பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்றுவருகின்றன.
இதனை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் நேற்று (19) மாலை ஒலுவில் வெளிச்ச வீட்டு கடற்கரை பிரதேசத்துக்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டார். இதில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்.எம்.யாசிர் ஐமன் மற்றும் அப்பிரதேச பொதுமக்கள் உள்ளிட்டோர் அங்கு நிலவும் குறைபாடுகள் பற்றி கிழக்கு மாகாண சபை உறுப்பினரிடம் எடுத்துரைத்தனர்.
பைஷல் இஸ்மாயில் -
0 Comments