ஹாலிவுட் பிரம்மாண்டம் ஜாக்கிச்சான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார் இது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் கடந்த சில தினங்களாக சக்கைப் போடுட்டுக் கொண்டிருக்கும் ஒரு செய்தி இதை அதிகமானோர் பதிவிட்டும் ஷேர் செய்தும் வருகி ன்றனர் இதற்கு கருத்துக்களும் வரவேற்பு பலமாக கிடைத்து வருகிறது.
மேலும் அவர் புனித மக்கா வந்துள்ளதாகவும் இதற்கு மேல் எந்த படத்தை தான் நாடிக்க போவதில்லை என்று கூறியுள்ளதாகவும் செய்தி வெளியிட்டனர்.
இதற்கு கருத்துக்கள் கேட்கவேண்டம் மாஷா அல்லாஹ் , அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்கு அக்பர் இப்படி கருத்துகள் குவிந்த வண்ணமுள்ளது.
ஆனால் இதன் உண்மை நிலை என்ற என்று நான் தேடிப்பார்த்த போது இந்த செய்திக்கு எதிர் மறை யாக இருந்தது. ஆம் மேலுள்ள படம் சவூதியில் அல்ல துபாயில் எடுக்கப்பட்டது.
அதாவது ஹாலிவுட் திரைப்படமான 'குங்புயோகா' என்ற திரைப்பத்தின் காட்சிகள் வரும் 30 ஆம் திகதி வரை துபாயில் இடம்பெற்றவுள்ளது. தன்னுடைய ஒய்வுநேரத்தை கழிப்பதற்காக அந்த நாட்டில் ஒட்டகப் பந்தய திடலுக்கு சென்றுள்ளார் அப்போது எடுக்க ப்பட்ட புகைப்படமே மேலுள்ள படம்ஆகும்.
இது போன்ற தவறான செய்திகளை பரப்பி இஸ்லாத் துக்கும், முஸ்லிம்களும் நாமேகெட்ட பெயர் வாங்கி கொடுத்துக் கொண்டு இருக்கிறேம் அப்படி செய்தி களை பரப்பும் உங்களுக்கு நபி அவர்களின் எச்சரிக்கை.
கேள்விப்படுவதை எல்லாம் எடுத்துச் சொல்பவன் பொய்யன் என்ற நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறினார்கள் [முஸ்லிம்-6]
-Mohamed Hasil


0 Comments