Subscribe Us

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 07

1916: அமெரிக்காவில் கால்பந்தாட்டப் போட்டியொன்றில் கம்பர்லாண்ட் பல்கலைக்கழக அணியை ஜோர்ஜியா டெக் அணி 220 - 0 விகிதத்தில்            தோற்கடித்தது. அமெரிக்க கல்லூரிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட வரலாற்றில் மிகவும் ஒருபக்கச்சார்பான போட்டி இது. 

1985: பலஸ்தீன தீவிரவாதிகள், இத்தாலிய உல்லாசப் கப்பலான அச்செல் லோராவை 420 பயணிகளுடன் மத்தியத்தரைக் கடலில் வைத்து            கடத்தினர். இஸ்ரேலிய சிறைகளிலுள்ள தமது சகாக்கள் 50 பேரை விடுவிக்குமாறு அவர்கள் கோரினர். 

1919: நெதர்லாந்தின் கே.எல்.எம். விமான சேவை ஆரம்பம். தனது ஆரம்பப் பெயருடன்  இன்னும் இயங்கும் மிகப் பழைமையான விமான சேவை இது. 

1920: சுவால்கி உடன்படிக்கையில் போலந்தும் லிதுவேனியாவும் கையெழுத்திட்டன. 

1933: 5 விமான சேவை நிறுவனங்களை இணைத்து எயார் பிரான்ஸ் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. 

1949: ஜேர்மன் ஜனநாயக குடியரசு (கிழக்கு ஜேர்மனி) ஸ்தாபிக்கப்பட்டது. 

1958: பாகிஸ்தானில் ஜெனரல் அயூப்கானின் உதவியுடன் ஜனாதிபதி ஸ்கந்தர் மிர்ஸா, அரசியலமைப்பை இடைநிறுத்தி இராணுவ சட்டத்தைப் பிறப்பித்தார். 

1959: சோவியத் யூனியனின் 'லூனா-3' விண்கலம் பூமியிலுள்ளவர்களுக்குத் தென்படாத, சந்திரனின் மறுபக்கத்தை படம்பிடித்தது. 

1960: ஐ.நா. சபையில் நைஜீரியா இணைந்தது. 

1971: ஐ.நா. சபையில் ஓமான் இணைந்தது. 

Post a Comment

0 Comments