Subscribe Us

header ads

ஜமிய்யத்துஸ் சபாப் நிறுவனம் 18 வது முறையாக ஏற்பாடு செய்த இலவச கண் சிகி்ச்சை முகாமில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் (படங்கள்)

ஜமிய்யத்துஸ் சபாப் நிறுவனம் 18 வது முறையாக ஏற்பாடு செய்த இலவச கண் சிகி்ச்சை முகாம் புத்தளம் குவைத் வைத்தியசாலையில் 3 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை இடம் பெறுகின்றது.

இம்முறை 500 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை மற்றும் கண்ணில் வெள்ளை படலத் திரையினை அகற்றுதல் என்பன இடம் பெறுகின்றது.நாடு தழுவிய முறையில் இந்த கண் சிகிச்சை முகாம் இடம் பெறுவதாக ஜமிய்யத் சபாப் நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் மௌலவி தாசிம் தெரிவித்தார்.

புத்தளம் உள்ளிட்ட நாட்டின் கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த சகல இனத்தை சேர்ந்தவர்களும் இந்த சிகி்ச்கை முகாமில் நன்மையடைந்துவருவதை காணமுடிந்தது.

இன்றைய உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி,அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை புத்தளம் மாவட்ட பொறுப்பளார் அப்துல்லா மஹ்மூத் ஆலிம்,,வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.நியாஸ்,என்.ரீ தாஹிர்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி,ஷபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் அப்துர் ரஷீட்,பௌத்த மத குரு மற்றும் குவைத் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் முகைஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் மற்றும் சிகிச்சைப் பெற்றுள்ள நோயாளர்களின் சுக நிலையினையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உள்ளிட்ட பிரதி நிதிகள் கேட்டறிந்து கொண்டனர்.

எதிர்வரும் 11 ஆம் திகதி தொடக்கம் இந்த இலவச வைத்திய முகாம் காத்தாண்குடி பொது வைத்தியசாலையில் இடம் பெறும் என்றும் அங்கு 600 பேருக்கு இலவச சிகிச்சையளிக்கப்படவுள்ளதாகவும் மௌலவி தாஷிம் குறிப்பிட்டார்.

-     புத்தளம் குவைத் வைத்தியசாலையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -














Post a Comment

0 Comments