இந்தியாவை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 7 வயது சிறுமி கீதா 15 வருடத்திற்கு முன்பு ரெயிலில் வழிதவறி தனியாக லாகூர் சென்றார். அங்கு தவித்த அவரை அங்குள்ள எத்தி அறக்கட்டளையினர் மீட்டு கராச்சிக்கு கொண்டு சென்று வளர்த்து வந்தனர். தற்போது 22 வயதுள்ள மாற்றுத்திறனாளி பெண் கீதா பாகிஸ்தானில் இருப்பது இந்திய வெளியுறவு துறைக்கு தெரியவந்தது.
மேலும் கீதாவை இந்தியா கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. விரைவில் அவர் நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் இருக்கும் அவரிடம் நடத்தப்பட்ட வீடியோ கான்பரன்சிங் உரையாடலில், இந்தியா வந்தவுடன் முதலில் பாலிவுட் நடிகர் சல்மான் கானைதான் முதலில் சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சல்மான் கான் நடித்து வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் பஜ்ரங்கி பாய்ஜான். இந்த படத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த போது, தனது குடும்பத்தை பிரிந்துவிட்ட வாய்பேச முடியாத மாற்றுதிறனாளி சிறுமி ஒருவர் வரை, மீண்டும் அவரது குடும்பத்துடன் சேர்க்க முயற்சிப்பவராக சல்மான் கான் நடித்திருந்தார்.
இந்த படம் வெளியான பின்பே பாகிஸ்தானில் இருக்கும் கீதாவை பற்றி இந்தியாவிற்கு தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது

0 Comments