Subscribe Us

header ads

செவிப்­புலன் ஆற்றல் குறைந்த தந்­தை­யுடன் உரத்த குரலில் வீதியில் உரை­யா­டிய நபர்

வீதியில் செவிப்­புலன் ஆற்­ற­லற்ற தனது தந்­தை­யுடன் மிகவும் உரத்த குரலில் உரை­யா­டிய நப­ரொ­ரு­வ­ரால் சின­ம­டைந்த அவ­ரது அயல் வீட்டில் வசிக்கும் இளைஞன், அவ­ரது குரல்­வ­ளையை உடைந்த போத்­தலால் குத்தி படு­கொலை செய்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.

சிட்னி நகரின் தென்­மேற்கே ரகெம்பா எனும் இடத்தைச் சேர்ந்த கெல்லி வென்­ரி­கடூ (45 வயது) என்ற மேற்­படி நபர், சம்­பவ தினம் அதி­காலை வேளையில் தனது பெற்­றோ­ருடன் வெளியில் சென்று விட்டு திரும்­பிய வேளை­யி­லேயே இந்தப் படு­கொலை இடம்­பெற்­றுள்­ளது.
தாய் வீட்­டினுள் சென்­று­விட கெல்லி வீதியில் நின்­ற­வாறு தனது செவிப்­புலன் ஆற்றல் குறைந்த தந்­தை­யுடன் உரத்த குரலில் உரை­யா­டி­யுள்ளார்.
இதன்­போது அங்கு வந்த அயல் வீட்டில் வசிக்கும் 24 வயது இளைஞன் சினத்­துடன் கெல்­லியை நெருங்­கி­யுள்ளான்.
கெல்லி சத்­த­மாக உரை­யா­டி­யது தனது தவ­றென ஒப்­புக்­கொண்டு அமை­தி­யாக வீட்­டுக்குள் செல்ல இணங்­கிய போதும், அந்த இளைஞன் சினம் தணி­யாமல் கெல்­லி­யுடன் வாக்­கு­வாதத்தில் ஈடு­பட்டு அவ­ரது குரல்­வ­ளையை உடைந்த போத்­தலால் குத்தி அவரைப் படு­கொலை செய்­த­தாக கெல்­லியின் மக­னான கிம் தெரி­வித்­துள்ளார்.
இந்­நி­லையில் மேற்­படி படு­கொ­லையை மேற்­கொண்ட குறிப்­பிட்ட இளைஞன் ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­பகல் தானாக முன்­வந்து பொலி­ஸா­ரிடம் சர­ண­டைந்­துள்ளான்.
அந்த இளைஞன் மது­போதை கார­ண­மா­கவா அல்லது இனவாத குரோதம் காரணமாகவா மேற்படி படுகொலையை மேற்கொண்டான் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments