Subscribe Us

header ads

12 திவிநெகும பயனாளிகளுக்கு தலா 150,000 ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைப்பு

அபு அலா -

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திவிநெகும பயனாளிகளின் குடும்பங்களுக்கான சீட்டிழுப்பு திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான காலோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. 

பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளின் வீட்டுக்கான சீட்டிழுப்பு திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை, ஒலுவில், தீகவாபி மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களிலிருந்து 12 திவிநெகும பயனாளிகளுக்கு தலா 150,000 ரூபாய் பெறுமதியான காசோலைகளை பிரதம அதிதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வழங்கி வைத்தார். 

Post a Comment

0 Comments