Subscribe Us

header ads

மருதமுனை பொது நூலக கட்டிடத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள சமூக வள நிலையத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள்

ஆசியா பவுண்டேஷன் கொய்கா செயற்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் அனுசரணையுடன் மருதமுனை பொது நூலக கட்டிடத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள சமூக வள நிலையத்திற்கு அந்நிறுவனத்தினால் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

நேற்று முன்தினம் இடம்பெற்ற கையளிப்பு நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியிடம் ஆசியா பவுண்டேஷன் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் இத்தளபாடங்களை கையளித்தார். இந்நிகழ்வில் நூலகர் திருமதி நஸ்லியா உமர் கத்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சமூக வள நிலையத்திற்கு ஆசியா பவுண்டேஷன் ஏற்கனவே கணினித் தொகுதி, மல்டிமீடியா புரஜக்டர், பிரிண்டர், ஒலிபெருக்கித் தொகுதி உள்ளிட்ட பல உபகரணங்களை வழங்கியுள்ளதாக நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.

மருதமுனைப் பிரதேச மக்களின் நலன் கருதி பொது நூலக கட்டிடத் தொகுதியில் சமூக வள நிலையத்தை உருவாக்குவதற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான கருத்திட்டத்தை வடிவமைத்து நிதியொதுக்கீடு செய்தமைக்கு ஆசியா பவுண்டேஷனுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாக ஆணையாளர் ஜே.லியாகத் அலி குறிப்பிட்டார்.

-Aslam S. Moulana-

Post a Comment

0 Comments