பல்வேறு நாடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென முக்கியச் இடங்களில் பிரத்யேகமாக வாகன நிறுத்தம் இருந்தாலும், அதில் தமது அவரசத்துக்காக மாற்றுத்திறனாளி அல்லாதவரே தமது வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய ரஷ்ய தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனையை இது போன்றவர்களுக்கு உணர்த்தும் விதமாக ஒரு ஏற்பாட்டை செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான வாகன நிறுத்தங்களில் புரொஜக்டர் ஒன்று வைக்கப்பட்டு அதில் வரும் லேசர் ஒளி மூலம் ஒரு ‘ஹாலோகிராம்’ முப்பரிமாண வடிவமாக ‘ஒரு மாற்றுத்திறனாளியின்’ கருத்துக்கள் வெளிவருகின்றது.
இங்கு நிறுத்தவரும் வாகனங்களில் மாற்றுத்திறனாளி என்பதற்கான முத்திரையான ‘நீல நிற அட்டை’ ஒட்டப்பட்டிருக்கும் வாகனங்களை மட்டுமே இது வாகன நிறுத்தத்தில் அனுமதிக்கின்றது. மற்றவர்கள் தமது வாகனங்களை நிறுத்த முயலும்போது, ‘நான் இங்கு இருப்பது தெரியவில்லையா? இது எனக்கான இடம்’ என தனது உரிமையை முப்பரிமாண வடிவத்தில் தெரியும் ஒரு மாற்றுத்திறனாளியே சொல்வதுபோல வடிவமைக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றது.
இன்றும் நம் ஊரில் மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையாக ஒரு அரசுத் தேர்வு எழுதவோ, ஏன்? சாலையோர பாதையைக் கடக்கவோ கூட செல்வதற்கு ஏற்ப முறையாக பாதைகள் அமைக்கப்படவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
இதுபோன்ற ஹாலோகிராம்கள் ரஷ்யாவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் வீடியோ உங்கள் பார்வைக்கு..,

0 Comments