Subscribe Us

header ads

எந்த மதரசாவில் தங்கள் குழந்தைகளை சேர்த்துக்கொள்ளலாம் - இது பெற்றோர்களுக்கானது

இலங்கை முஸ்லிம்களில் மௌலவிகள் அதிகரிப்பு என்ற குற்றச்சாட்டு பெருகிவரும் இந்தக்காலத்தில் அல்லாஹ்வின் உதவியால் அதன் வளர்ச்சி அதிகப்பட்டுக்கொண்டே போகுது பாராட்டப்படவேண்டியது அல்ஹம்து லில்லாஹ். இப்போது இந்த காலகட்டம் எதிர் வரும் 2016 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை சேர்க்கும்பணியில் எல்லா அரபு மதரசாக்களும் போட்டிபோட்டுக்கொண்டு செயற்படுவதை மீடியாக்கள் மூலம் காணக்கூடியதாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

 இதில் எந்த மதரசாவில் தன் மகனை சேர்த்துக்கொள்ளலாம் என்ற சிந்தனையில் பெற்றோர்கள் ஆங்காங்கு விசாரித்து பார்க்கும் காட்சிகளை பார்க்க முடியும்.இதில் அதிகமாக பெற்றோர்கள் எதிர்பார்ப்பது தன் பிள்ளை சிறந்த ஆலிமாக வரவேண்டும் தன் குடும்பத்துக்கு தீன் வழிகாட்டியாக வரவேண்டும் என்ற பேராசையில் மூழ்கியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பெற்றோர்கள் நன்கு சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது. மதரசாவில் சேர்க்கும் நம் பிள்ளைகள் உன்மையிலேயே பச்ச பாலகர்கள் அதாவது பச்ச மண்ணைபோன்றவர்கள் இந்த மண்ணால் வேண்டியதை செரிக்கட்ட முடியும் என்ற பருவத்தில்தான் நம் சிறார்கள் இருக்கிறார்கள்.

நாம் சேர்த்துவிடும் மத்ரசாவில் கட்டணம் குறைவு என்பதற்காகவோ,நமக்கு போக்குவரத்து தூரமற்றது என்பதற்காகவோ அல்லது இவன் பாடசைகல்வி கற்றுக்கொள்ள லாயிக்கில்லாதவனாக இருக்கிறான் என்பதற்காகவோ,தெருச்சண்டையை வீட்டுக்கு இழுத்துகொண்டு வருகிறான்  இவனை மதரசாவில் சேர்த்தால்தான் இவன் திருந்துவான் என்பதற்காவோ அன்றி இம்மாணவன் உண்மையான தீன்தாரியாக தன்னையும் தன்குடும்பத்தையும் தனது சமுதாயத்தையும் வழிநடத்தக்கூடிய ஒரு சிறந்த உலமாவாக வர வேண்டும் என்ற சிந்தனையோடு தன் பாசத்துக்குரிய மகனை சேர்க்கும் மதரசா எவ்வாறான கொள்கையில் உள்ளது என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
  
இன்று சில மதரசாக்களில் ஆலிம் பட்டம் எடுத்து வரும் தன்னை ஆலிம்கள் என்று வாதாடும் ஆலிம்களை எடுத்துக்கொண்டால் பெற்றோர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு வித்தியாசமான கொள்கையும்,மார்க்கப்பற்று இல்லாமை,சரியான இஸ்லாம் பற்றி அறவே விளக்கம் இல்லாதவர்களாகவும் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆகவே ஒரு மதரசாவில் சேர்க்கமுன் அந்த மதரசாவில் ஏற்கனவே ஓதிய மாணவர்களை சற்று உற்று நோக்கி பார்க்க வேண்டும். அவ்வாறில்லாமல் நன்கு குளித்து விட்டு சேரில் விழுந்த கதையாக மாறிவிடும்.

இன்னும் ஒன்றை கவனிக்க வேண்டும் இம்மாணவன் உண்மையில் அரபி மதரசாவில் படிப்பதற்கு விருப்பமுள்ளவனாக இருக்கிறானா என்பதையும் பார்க்க வேண்டும் அதிகமான மாணவர்கள் பெற்றோரின்,குடும்பத்தத்தாரின் கட்டாயப்படுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு சேர்க்கப்படுவதால் அம்மாணவன் பாடசாலை கல்வியும் இழந்து மத்ரசாக்கல்வியும் இழக்க வேண்டிய நிர்க்கதிக்கு ஆளாக வேண்டிஏற்படுகிறது.இதையல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஏன் நாம் தன் மகனை மதரசாவில் சேர்த்தோம் என்று கவலைப்படும் பெற்றோர்களும் நம் சமுதாயத்தில் இல்லாமல் இல்லை.

சில உலமாக்களிடம் சாதாரண பாடசாலைக்கல்வி பயின்ற நேர்மையுள்ள மாணவர்களிடம் இருக்கும் பண்பு, தீன் பற்று, அல்லாஹ்வுடைய பயம், உறுதியான ஈமான் பற்று, நல்ல கொள்கைகள்,நல்ல பேச்சு திறமை,தீன் சம்மந்தமான பதிலளிக்கும் சக்தி அறவே இல்லை என்பது கசப்பான உண்மை. 

-M.JAWFER.JP-

Post a Comment

0 Comments