சம்மாந்துறை பிரதேச சபையானது,133 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும், 51 கிராம அலுவலர்கள் பிரிவையும்,85000 மக்கள் தொகையையும், 42000 வாக்காளர்களினையும் கொண்ட பிரதேசமாகும்.இது 1947 ம் ஆண்டிலிருந்து பட்டின சபையாகவும்,1960 ம் ஆண்டிலிருந்து பட்டின சபை மற்றும் கிராம சபையாகவும்,1988ம் ஆண்டிலிருந்து பிரதேச சபையாகவும் இயங்கி வருகின்றது.எவ் ஆண்டிலிருந்து நகர சபையாகவும்,மா நகர சபையாகவும் இது இயங்கும்? என்பதே இங்குள்ள வினாவாகும்.
கடந்த ஏப்ரல் மாதம் அளவில் தற்போதைய திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் வேண்டுகோலிற்கு இணங்க அமைச்சர் ஹக்கீமிடம் அந் நேரத்தில் உள்ளூராட்சி அமைச்சராக கரு ஜெயசூரிய சம்மாந்துறை பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த்த பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்திருந்ததாக செய்திகள் பரவி இருந்தன.சம காலத்தில் சம்மாந்துறை ஐ.தே.க அமைப்பாளர் ஹசன் அலி அவர்களிடமும் கரு ஜெயசூரிய வாக்களித்திருந்தார்.பாராளு மன்ற உறுப்பினர் மன்சூர்,சம்மாந்துறை ஐ.தே.க அமைப்பாளர் ஹசன் அலி ஆகிய இருவரும் சம்மாந்துறை மக்களின் தாகத்தினை அறிந்து வைத்திருந்ததால் தான் இக் கோரிக்கையினை விடுத்தார்களே தவிர சம்மாந்துறை மக்கள் இதனைப் பெற்றுக் கொள்ள எது வித முயற்சியினையும் இது வரை எடுத்ததாக அறிய முடியவில்லை.
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தினை பெறுவதனை மாத்திரம் நோக்காகக் கொண்டு அவ் ஊரின் புத்தி ஜீவிகளினை உள்ளடக்கிய ஒரு இயக்கம் சாய்ந்தமருது மறு மலர்ச்சி இயக்கம் என்ற பெயரில் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது.இக் கோரிக்கையினை அக் காலப்பகுதியில் இவ் இயக்கம் முன் வைத்த போது சாய்ந்தமருது மக்களிடம் கூட அக் கோரிக்கை அதிகம் எடுபடவில்லை.ஆனால்,தற்போது அவ் அமைப்பின் செயற்பாடு பிரதமர் உறுதி மொழியினை வழங்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.ஒரு உள்ளூராட்சி மன்றத்தில் இருந்து ஒரு பகுதினை சுயாதீனமான உள்ளூராட்சி மன்றமாக விடுவிக்க அக் குறித்த மாகாண சபை,அக் குறித்த பிரதேச செயலகம்,அக் குறித்த உள்ளூராட்சி மன்றம் அனுமதிக்க வேண்டும்.
அது மாத்திரமின்றி இதனைப் பெறுவதில்,சில அரசியற் தடை,எல்லை பிரச்சினை (சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லையினையே சாய்ந்தமருது மக்கள் தங்கள் வரையறுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற எல்லையாக கேட்கின்றனர்.இருந்த போதிலும்,கல்முனை முஸ்லிம்கள் பாதிப்புறா வண்ணம் சாய்ந்தமருது எல்லை பிரிக்கப்படல் வேண்டும் என்பது அக் குறித்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினரின் கல்முனை மக்கள் சார்பான கோரிக்கை.இதனை அவர் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதில் முன் வைத்திருந்தார்.),முஸ்லிம்க ள் ஆளச் சாத்தியமான இலங்கையில் உள்ள ஒரே ஒரு மா நகர சபை கல்முனை முஸ்லிம்களின் ஆதிக்கத்தினை விட்டுச் செல்லுமா? போன்ற பல்வேறு பிரச்சனைகள் அதில் காணப்பட்ட போதும் அம் மக்களின் உறுதியான இக் கோரிக்கையின் முன்பு அரசியல் வாதிகள் எதனையும் சிந்திக்காது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தினை பெற்றுக் கொடுத்து வாக்கினை அள்ள முயற்சிக்கின்றனர்.
எவரும் பாதிக்கப்படாத உண்மைத் தீர்வு கல்முனை உள்ளூராட்சி மன்றத்தினை நான்கு உள்ளூராட்சி மன்றங்களாக பிரிப்பதிலேயே உள்ளது.கல்முனை மா நகர சபையினை சாய்ந்தமருது,மருதமுனை,கல்ம ுனை தமிழ்,கல்முனை முஸ்லிம் என நான்கு பிரிவுகளாக பிரிக்க வேண்டும்.இதனையே முன்னாள் உள்ளூராட்சி அமைச்சரானஅதாவுல்லாஹ்வும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.இதனை அனைவரும் ஏற்றும் உள்ளனர்.எனினும்,சாய்ந்தமரு து மக்கள் இக் கோரிக்கையில் மிகவும் உறுதியாக இருப்பதால் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அமைச்சர் அதாவுல்லாஹ் எதனையும் சிந்திக்காது,சாய்ந்தமருதிற ்கு உள்ளூராட்சி மன்றத்தினை வழங்க முன் வந்தார்.தற்போது எதனையும் சிந்திக்காது மு.காவும்,அ.இ.ம.காவும் சாய்ந்தமருதிற்கு உள்ளூராட்சி மன்றத்தினை பெற்றுக் கொடுப்பதில் தீவிரம் காட்டுகின்றனர்.பிரச்சனை உள்ளது எனக் கூறினால் அவர்களின் அரசியலுக்கு சாய்ந்தமருதில் பிரச்சனையாகிவும்.
கல்முனை உள்ளூராட்சி மன்றத்தினை நான்கு உள்ளூராட்சி மன்றங்களாக பிரிக்க சிந்தித்தால் அது இலகுவில் செய்து முடிக்குமளவான ஒரு விடயமாக இருக்காது.கல்முனை தமிழ்,முஸ்லிம் எல்லை வரையறுப்பில் பாரிய யுத்தமே நிகழ வாய்ப்புள்ளது.ஆனால்,சாய்ந் தமருதிற்கு அவசரமாக உள்ளூராட்சி மன்றம் தேவைப்படுகிறது.இதனால் ஏற்படப் போகும் விளைவுகள் எதனையும் சிந்திக்காது சாய்ந்தமருதின் தேவையினை நிறைவேற்ற அரசியல் வாதிகள் வரிசை கட்டி நிற்கின்றனர்.அமைதியாக இருந்தால் எதுவும் கிடைக்காது என்பதே இன்றைய நிலை என்பதை என்பதை எமது சமூகம் முதலில் உணர வேண்டும்.சாய்ந்தமருதினை இங்கே முன் உதாரணமாய் எடுத்ததற்கான காரணம் பிரச்சினைகள் பல உள்ள போதும் அதனை பெற்றுக் கொடுப்பதில் அரசியல் வாதிகள் தீவிரம் காட்டுகின்றனர்.எது வித பிரச்சனைகளும் இல்லாத சம்மாந்துறை பிரதேச சபையினை நகர சபையக்குவதில் ஏன் தீவிரம் காட்டாமல் உள்ளனர்? அழுத பிள்ளை தானே! பால் குடிக்கும்.
ஒரு பிரதேச சபையினை நகர சபையாக மாற்றுவதில் அக் குறித்த பிரதேச சபையின் நில விஸ்தீரணம்,மக்கள் தொகை,வருமானம்,மக்கள் செறிவு போன்ற காரணிகள் செல்வாக்குச் செலுத்தும்.ஒரு பிரதேச சபையினை நகர சபையாக்குவதற்கான அத்தனை தகுதிகளும் சம்மாந்துறை பிரதேச சபைக்குள்ள போதும்,அதனை அரசியல் வாதிகள் பெற்றுக் கொடுப்பதில் ஏன் பொடுபோக்காக உள்ளனர்? அரசியல் வாதிகள் இதில் கரிசனை அற்றுக் கிடக்க சம்மாந்துறை மக்கள் எது வித அழுத்தத்தினையும் வழங்காமையினையே பிரதான காரணமாக குறிப்பிடலாம்.அழுத பிள்ளையே பால் குடிக்கும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
(akmhqhaq@mail.com)
சம்மாந்துறை.
கடந்த ஏப்ரல் மாதம் அளவில் தற்போதைய திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் வேண்டுகோலிற்கு இணங்க அமைச்சர் ஹக்கீமிடம் அந் நேரத்தில் உள்ளூராட்சி அமைச்சராக கரு ஜெயசூரிய சம்மாந்துறை பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த்த பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்திருந்ததாக செய்திகள் பரவி இருந்தன.சம காலத்தில் சம்மாந்துறை ஐ.தே.க அமைப்பாளர் ஹசன் அலி அவர்களிடமும் கரு ஜெயசூரிய வாக்களித்திருந்தார்.பாராளு
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தினை பெறுவதனை மாத்திரம் நோக்காகக் கொண்டு அவ் ஊரின் புத்தி ஜீவிகளினை உள்ளடக்கிய ஒரு இயக்கம் சாய்ந்தமருது மறு மலர்ச்சி இயக்கம் என்ற பெயரில் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது.இக் கோரிக்கையினை அக் காலப்பகுதியில் இவ் இயக்கம் முன் வைத்த போது சாய்ந்தமருது மக்களிடம் கூட அக் கோரிக்கை அதிகம் எடுபடவில்லை.ஆனால்,தற்போது அவ் அமைப்பின் செயற்பாடு பிரதமர் உறுதி மொழியினை வழங்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.ஒரு உள்ளூராட்சி மன்றத்தில் இருந்து ஒரு பகுதினை சுயாதீனமான உள்ளூராட்சி மன்றமாக விடுவிக்க அக் குறித்த மாகாண சபை,அக் குறித்த பிரதேச செயலகம்,அக் குறித்த உள்ளூராட்சி மன்றம் அனுமதிக்க வேண்டும்.
அது மாத்திரமின்றி இதனைப் பெறுவதில்,சில அரசியற் தடை,எல்லை பிரச்சினை (சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லையினையே சாய்ந்தமருது மக்கள் தங்கள் வரையறுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற எல்லையாக கேட்கின்றனர்.இருந்த போதிலும்,கல்முனை முஸ்லிம்கள் பாதிப்புறா வண்ணம் சாய்ந்தமருது எல்லை பிரிக்கப்படல் வேண்டும் என்பது அக் குறித்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினரின் கல்முனை மக்கள் சார்பான கோரிக்கை.இதனை அவர் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதில் முன் வைத்திருந்தார்.),முஸ்லிம்க
எவரும் பாதிக்கப்படாத உண்மைத் தீர்வு கல்முனை உள்ளூராட்சி மன்றத்தினை நான்கு உள்ளூராட்சி மன்றங்களாக பிரிப்பதிலேயே உள்ளது.கல்முனை மா நகர சபையினை சாய்ந்தமருது,மருதமுனை,கல்ம
கல்முனை உள்ளூராட்சி மன்றத்தினை நான்கு உள்ளூராட்சி மன்றங்களாக பிரிக்க சிந்தித்தால் அது இலகுவில் செய்து முடிக்குமளவான ஒரு விடயமாக இருக்காது.கல்முனை தமிழ்,முஸ்லிம் எல்லை வரையறுப்பில் பாரிய யுத்தமே நிகழ வாய்ப்புள்ளது.ஆனால்,சாய்ந்

0 Comments