Subscribe Us

header ads

BlackBerry Priv கைப்பேசிகளுக்கான அப்பிளிக்கேஷன் கூகுள் பிளே ஸ்டோரில்

BlackBerry நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான BlackBerry Priv- இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசிக்கான அப்பிளிக்கேஷன்கள் கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதில் BlackBerry Camera app, Password Keeper போன்ற பல்வேறு அப்பிளிக்கேஷன்கள் தரப்பட்டுள்ளன.

மேலும் BlackBerry Priv கைப்பேசியானது 5.4 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Octa Core Qualcomm Snapdragon 810 Processor பிரதான நினைவகமாக 3GB RAM என்பவற்றினையும் 18 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

Post a Comment

0 Comments