Subscribe Us

Biggest bribe - இலங்கை வரலாற்றில் சிக்கிக் கொண்ட மிகப் பெரிய இலஞ்சத்தொகை

125 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெறமுனைந்த மூன்று சுங்கதுறை அதிகாரிகள் , இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரி, பிரதி அதிகாரி மற்றும் உதவி சுங்க அதிகாரி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை பஞ்சிகாவத்தையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு உதிரிபாகங்களை பெற்றுகொள்ளும் கொடுக்கல் வாங்கலுக்காகவே இவ்வாறு இலஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments