இந்தியாவில் வரும் நவம்பர் 6-ம் தேதி முதல் ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரிசையில் தற்போது இந்தியாவிலும் விற்பனையாக வர இருக்கிறது ஆப்பிள் வாட்ச். இந்தியாவில் மூன்று வகைகள் (ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் வாட்ச் எடிஷன்) ஆகியவை விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
மேலும் இரண்டு அளவுகளில் (38 மிமீ மற்றும் 42 மிமீ) அவை கிடைக்கும். இந்தியாவிற்கான விலை அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஆப்பிள் வாட்ச்சின் விலை 23 ஆயிரத்தில் தொடங்கி 11 லட்சம் (தங்கம்) வரை கிடைக்கிறது.

0 Comments