Subscribe Us

header ads

முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட உயிர்ப்புள்ள வெடிகுண்டில் 30 ஆண்டுகளாக பூச்செடி வளர்த்த பெண்...

போர்க்களத்தில் பூச்செடி வைப்பது என்ற ஒரு முதுமொழி எத்தனை பேருக்கு பொருந்தியிருக்குமோ, தெரியவில்லை. ஆனால், பயங்கரமான ஆபத்து நிறைந்த வெடிகுண்டில் பூச்செடி வளர்த்த ஒரு பெண்ணைப் பற்றிய சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேத்தரின் ராலின்ஸ்(45) என்பவர் 15 வயது சிறுமியாக இருந்தபோது தனது வீட்டின் அருகாமையில் உள்ள வெட்டவெளியில் கேட்பாரற்று கிடந்த ஒரு வினோதமான உலோகப் பொருளை கண்டெடுத்தார். சற்று கனமாக இருந்த அந்தப் பொருளின்மீது அன்னிய மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.

அதை ஆர்வத்துடன் பள்ளிக்கு கொண்டுசென்ற கேத்தரின், சகதோழிகளுக்கு காண்பித்து மகிழ்ந்தார். பின்னர், அதை தனது வீட்டின் வரவேற்பறை மேஜையில் செங்குத்தாக நிற்கவைத்திருந்த அவர், அதன் மேல்மூடியை திறந்து சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அழகு மலர்களை வளர்க்கும் தொட்டியாக பயன்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான முதலாம் உலகப்போர் தொடர்பான செய்தி தொகுப்பை பார்த்த கேத்தரின் திடுக்கிட்டார். அந்தப் போரில் ஜெர்மனி நாட்டின் விமானங்களில் இருந்து இங்கிலாந்தின் பல பகுதிகளில் வீசப்பட்ட வெடிகுண்டுகள் தனது வீட்டு வரவேற்பறையில் வைக்கப்பட்டுள்ள பூந்தொட்டி போலவே இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உயிர்ப்புடன் இருக்கும் மகா பயங்கரமான வெடிகுண்டை வீட்டின் வரவேற்பறையில் 30 ஆண்டுகளாக வைத்திருப்பதை அறிந்து, பதறிப்போன அவர், உடனடியாக இதுதொடர்பாக அருகாமையில் உள்ள போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்துவந்த போலீசார், அந்த வெடிகுண்டை செயலிழக்க வைத்து, அதன் கூட்டை மட்டும் தற்போது கேத்தரினிடம் ஒப்படைத்துள்ளனர்.

நல்லபிள்ளையைப்போல் உறங்கிக் கொண்டிருந்த அந்த குண்டு வெடித்து சிதறியிருந்தால் கேத்தரின் வசித்துவரும் வீடே தரைமட்டமாக போய் இருக்கும். சுமார் 20 மீட்டர் சுற்றளவு தூரத்தில் இருந்தவர்கள் உடல் சிதறி பலியாகியிருப்பார்கள் என போலீசார் தெரிவித்தனர்.




Post a Comment

0 Comments