Subscribe Us

header ads

ரஸ்ய விமானம் விபத்துக்குள்ளானது!: 217 பயணிகள் விமானத்தில்..

இன்று காணாமல் போன ரஸ்ய விமானம் எகிப்தின் மத்திய சினாய் பகுதியில்
விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எகிப்திய பிரதமரை மேற்கோள்காட்டியே இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

எமது முன்னைய செய்தி

ரஸ்ய விமானமொன்று எகிப்தின் சினாய் தீபகற்பம் பகுதியில் காணாமல் போயுள்ளது.

இதன்போது விமானத்தில் 200 பயணிகள் இருந்த தாகவும் வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் வெவ்வேறான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எகிப்தின் Sharm al-Sheikh நகரில் இருந்து புறப்பட்ட விமானம் , அந்நாட்டு
கட்டுப்பாட்டறையுடனான தொடர்பை இழந்ததாகவும் , ஆனால் துருக்கி நாட்டின் விமான கட்டுப்பாட்டு பிரிவுடன் தொடர்பு கொண்டதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

எனினும் விமானம் எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் விபத்துக்குள்ளானதாக வேறொரு தகவலும் , விமானம் சைப்பிரஸில் காணாமல் போனதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளதாக பி.பி.சி. தெரிவிக்கின்றது.

விமானத்தில் இருந்தோரில் அதிகமானோர் ரஸ்ய சுற்றுலாப் பயணிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Post a Comment

0 Comments