Subscribe Us

header ads

1.8 மில்லியனில் காத்தான்குடியில் கொங்கிறீட் வீதிக்கு அடிக்கல் வைத்தார் முதலமைச்சர்

கிழக்கு மாகாண சபை  PSDG  நிதியில் இருந்து  காத்தான்குடியில் மீன்பிடி லாகா வீதியினை கொங்கிறீட் வீதியாகப் புனரமைப்பதற்காக 1.8 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் கோரிக்கைக்கு அமைய குறிப்பிட்ட வீதியினைப் புனரமைக்கும் பணி நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டார்.

பல வருடங்களாக குண்டும் குழியுமாகக் கிடந்த இவ்வீதியினைப் புனரமைக்க பொதுமக்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கிடம் விடுத்த கொரிக்கையினைத் தொடர்ந்து  இவ்வீதிக்கு 1.8 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-CM MEDIA-

Post a Comment

0 Comments