-The Puttalam Times-
புத்தளம் முஜாஹிதீன் பள்ளி மஹல்லா, இல. 101/3 A, ஜே.பீ. லேன், புத்தளம் முகவரியில் வசிக்கும் சகோதரன் எம்.ஐ. அலிகான், தனது மனைவி சித்தி ரிப்ஸியாவின் இருதய சத்திர சிகிச்சைக்காக நிதி உதவி கோருகின்றார்.
சகோதரி சித்தி ரிப்ஸியா இருதய (நாளத்தில் துளை) நோயினால் கடந்த ஒரு வருட காலமாக பீடிக்கப்படுகின்றார். இதனை உடனடியாக சத்திர சிகிச்சை செய்து குணப்படுத்த முடியும் என்று கொழும்பு, தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஜே.பீ. ஜயவர்த்தண நம்பிக்கை தெரிவிக்கின்றார்.
இச் சத்திர சிகிச்சைக்காக ரூபா ஒன்றரை இலட்சம் (150,000.00) தேவைப்படுகின்றது. (வைத்திய அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது)
அன்றாட மேசன் கைக்கூலியாக தொழில் புரியும் சகோதரன் அலிகான், இந்தளவு தொகை பணத்தைத் திரட்டிக்கொள்ள முடியாமல் கஸ்டப்படுகின்றார். இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் இரண்டு ஆண் பிள்ளைகளும் பாடசாலை செல்லும் மாணவர்கள் ஆவர்.
இச் சத்திர சிகிச்சைக்கு உதவும் நல் உள்ளம் படைத்த தனவான்கள், கீழ் தரும் வங்கி கணக்கிற்கு தங்களால் இயன்ற உதவித் தொகையை அனுப்பிவைக்குமாறு தயவாய் கேட்டுக்கொள்கின்றோம்.
வங்கி கணக்கு இல. 76104351
Bank of Ceylon – Puttalam Branch
Fathima Afna (மூத்த மகள்)
மேலதிக விபரம்: 072 819 0056
![]() |
வைத்திய அறிக்கை |
பள்ளிவாசல் உறுதிக் கடிதம்
|
0 Comments