Subscribe Us

header ads

தன்மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அசாத்சாலி பதில் (VIDEO)


தாம் யாரையும் பலவந்தமாக தடுத்து வைக்கவில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்றுமாலை அசாத்சாலியின் வீட்டை முற்றுகையிட்ட நபர்கள் அவர் பெண் ஒருவரை பலாத்காரமாக தடுத்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டியது அறிந்ததே,

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அசாத்சாலி,

குறிப்பிட்ட பெண் மூன்று நாட்களுக்கு முன்னர் மகனுக்கு தொலைபேசி அழைத்து, என்னை ஒருவர் கடத்தி வைத்திருப்பதாக கூறியதாக வெளியான செய்தி பொய்யானது, அந்த பெண் போலீசுக்கே சென்று அந்த பிள்ளைகளின் முன்னிலையில் கூறினார், அவர்களின் முகத்தையும் பார்க்க எனக்கு விருப்பமில்லை, அவர்களுடன் இருக்க விருப்பமில்லை என்று கூறித்தான் வீட்டை விட்டு வேளியாகினேன்  என்று.

அவரை யாரும் கடத்தவும் இல்லை, பலாத்காரமாக தடுத்து வைக்கவும் இல்லை.

அசாத்சாலி இந்த நாட்டில் யாரையும் பலாத்காரமாக கடத்தி சென்றதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .


Post a Comment

0 Comments