Subscribe Us

header ads

கழிவறைத் தொட்டிக்குள் பதுங்கியிருந்த மலைப்பாம்பு: அச்சத்தில் பாம்பு பிடிப்பவரை அழைத்த வீட்டுக்காரர் (PHOTOS)

அவுஸ்திரேலியாவின் Queensland பகுதியில் குடியிருக்கும் வணிகர் ஒருவரது கழிவறையில் இருந்து 3 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை பாம்பு பிடிப்பவர் அப்புறப்படுத்தியுள்ளார்.

Queensland பகுதியில் வசித்து வரும் வணிகர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள பாம்பு பிடிப்பவரான Elliot Budd என்பவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, தங்களது வீட்டுக் கழிவறையில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த Elliot Budd, தொலைபேசி அழைப்பு விடுத்த வணிகர்கள் தங்கியிருந்த வீட்டின் கழிவறையில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை தெரிந்து கொண்டார்.

இதனையடுத்து அந்த மலைப்பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் அதை சீண்டி உசுப்பிய Elliot Budd இறுதியாக அந்த மலைப்பாம்பை கைய்யோடு பிடி கூடினார்.

தட்பவெப்பத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக குடிநீர் தேடி மலைப்பாம்புகள் வெளியே வந்திருக்கலாம் என தெரிவித்த Elliot Budd,

இரு தினங்களுக்கு முன்னர் இதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கழிவறையில் இருந்து மலைப்பாம்பு ஒன்றை பிடிகூடியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments