Subscribe Us

header ads

ஒரு ஹெலிகொப்டர் உள்பட 21 பொலிஸ் கார்களை திணற வைத்த திருடன்: சினிமாவை மிஞ்சிய ’ரேஸிங்’ காட்சிகள்

File Picture

ஜேர்மனி நாட்டில் ஆடி காரை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நபரை, ஒரு ஹெலிகொப்டர் உள்பட 21 பொலிஸ் வாகனங்களின் உதவியுடன் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள டஸ்சல்டோர்ஃப் நகரில் தான் இந்த விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறியுள்ளன.

நேற்று நள்ளிரவு 1.15 மணியளவில், சாலையில் பொலிசார் வாகனங்களை பரிசோதனை செய்துகொண்டு இருந்துள்ளனர்.

அப்போது, கருப்பு நிறத்தில் வந்த ஆடி காரை பரிசோதிக்க பொலிசார் நெருங்க முயற்சித்தபோது அது தடுப்புகளை உடைத்துக்கொண்டு அங்கிருந்து சீறிப்பாய்ந்துள்ளது.

சந்தேகம் அடைந்த பொலிசார், பிற பொலிசாருக்கு தகவல் அளித்துவிட்டு உடனடியாக அந்த ஆடி காரை பின் தொடர்ந்துள்ளனர்.

இரவு நேரத்தில் வாகன நெருக்கடி குறைவாக இருந்ததால், கருப்பு நிற ஆடி கார் அதிபயங்கர வேகத்துடன் பறந்துள்ளது.

காரின் பதிவு எண்ணை குறித்துக்கொண்ட பொலிசார், கூடுதலான ரோந்து கார்களிடம் அங்கே வந்து மர்ம காரை தடுத்து நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுபோன்ற சுமார் 21 பொலிஸ் கார்கள் அந்த ஆடிக்காரை துரத்தியுள்ளன.

ஜேர்மனியின் கோலோங், எஸ்சென் உள்ளிட்ட 12 நகரங்களை கடந்து அந்த மர்ம கார் பொலிஸ் கார்களை திணற அடித்துள்ளது.

நிலமையை உணர்ந்த பொலிசார், ஹெலிகொப்டரின் உதவியை நாடியுள்ளனர்.

ஹெலிகொப்டரும் துரத்தல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், அந்த மர்ம கார் ஜேர்மனிக்கு அருகில் உள்ள போலண்ட் நாட்டிற்குள் புகுந்து மறைந்துள்ளது.

சுமார் இரண்டு மணி நேரமாக தீவிரமாக துரத்தியும் காரை பிடிக்க முடியாததால், பொலிசார் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.

காரின் பதிவு எண்ணை விசாரணை செய்ததில், அது கடந்த மாதம் மர்ம நபரால் திருடப்பட்ட ஆடி கார் என தெரியவந்துள்ளது.

காருக்குள் 5 பேர் வரை பயணம் செய்துள்ளதால், அவர்கள் நாசவேலைகள் ஏதேனிலும் ஈடுபட உள்ளனரா என பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments