Subscribe Us

header ads

பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரிற்கான கௌரவிப்பும்,சமூக சேவைகள் பற்றிய கலந்துரையாடலும் (PHOTOS)


கடந்த வெள்ளிக் கிழமை (25-09-2015) அன்று சம்மாந்துறை மண்ணின் பல நாள் தாகத்திற்கு நீர் புகட்டிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களினை கௌரவிக்கும் நிகழ்வொன்று JAISA  சமூக சேவை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந் நிகழ்வில் கலந்து கொண்ட  பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்கள் தற்போது சமூகத்திற்கு எவ்வாறான சேவைகள்  தேவைப்படுகிறது?  அதனை எவ்வாறு திறம்பட செய்வது? அதன் போது எழுகின்ற பிரச்சனைகளினை எவ்வாறு முகம் கொடுப்பது? பற்றி குறித்த அமைப்புக்கு விளக்கியதுடன் அது பற்றிய கலந்துரையாடல் ஒன்றினையும் குறித்த அமைப்புடன் மேற்கொண்டிருந்தார்.

கிறாத் நிகழ்வுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் குறித்த அமைப்பின் தலைவர் தங்கள் அமைப்பு பற்றியும்,தங்களது அமைப்பின் எதிர்கால செயற்திட்டங்கள்  பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரிற்கு விளக்கியதுடன் தங்களது எதிர்கால செயற்திட்டங்களினை எழுத்துருவிலும் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரிடம் கையளித்தார்.இந் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்கள் “தான் இவ் அமைப்பின் சகல சமூக சேவைகளுக்கும் தன்னாலான உதவிகளினை செய்வேன்” என்ற உறுதி மொழியினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மேலும்,இங்கு கருத்து தெரிவித்த  பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்கள் “உளவியல் ரீதியாக எமது சமூகம் பல பிரச்சினைகளினை எதிர்கொண்டுள்ளது.இப் பிரச்சினைகளினை ஒழிப்பதற்கான பல்வேறு திட்டங்கள் என்னிடம் உள்ளன.இதற்கு உங்களைப் போன்ற அமைப்புக்களின் உதவிகள் எனக்கு தற்போது தேவைப்படுகிறது.எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள எனது திட்டங்களில் இந்த அமைப்பு எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்“ என தான் உறுதிபட நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் இறுதியில் குறித்த அமைப்பினால் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரிற்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
(akmhqhaq@gmail.com)

சம்மாந்துறை.






Post a Comment

0 Comments