Subscribe Us

header ads

புத்திசாலி ஆண்களுக்கு ஐம்பது வயதிலும் ஆரோக்கியத்தில் குறை இருக்காது...



நம்முடைய தற்போதைய பழக்கவழக்கங்களும், உணவு வழிமுறையும், கணினி சார்ந்த நமது அலுவல்களும் உடல் நலனில் அக்கறை காண்பிப்பதற்கான வழிக்கு நம்மை கொண்டு செல்வதேயில்லை. ஆகவே, ஐம்பது வயதில் நமது உடலின் நிலை மோசமாவதும், சீராக இருப்பதும் நமது தற்போதைய முடிவில்தான் உள்ளது.

டென்மார்க் தலைநகரில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சியில் இளமையில் புத்திசாலியாக இருக்கும் ஆண்கள் ஐம்பது வயதை எட்டும்போதும், நல்ல உடல் நலத்துடன் இருப்பர் என்று  கண்டறியப்பட்டுள்ளது.

இப்பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஆரோக்கிய முதுமை மையம் மற்றும் மக்கள் நலமையம் சார்பாக சுமார் 48-56 வயதுடைய 2848 டேனிஷ் ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், இது ஊர்ஜிதமாகியுள்ளது. இதனால், புத்திசாலியாக இருக்கும் ஆண், ஐம்பதைத் தொட்டாலும், யாருடைய உதவியும் இன்றி தன்னிச்சையாக செயல்பட முடியும் என இதன் மூலம் தெரியவந்துள்ளது.

படிக்கத் தெரிந்த ஆண்கள், தமது உடலைப் பாதுகாப்பாய்ப் பேண வேண்டியதின் அவசியத்தை அக்கறையெடுத்து தெரிந்து கொள்கின்றனர். இதனால் அவர்கள் வரையறுக்கப்பட்ட அளவு போஷாக்கான உணவை எடுத்துக்கொண்டு, முறையான உடற்பயிற்சியும் மேற்கொள்கின்றனர்.

எனவே, அவர்களுக்கு முதுகின் சக்தி, கைப்பிடிக்கும் சக்தி ஆகியவை நன்றாகவே காணப்படுகிறது. இதனால், பொதுவான அவ்வயது ஆட்களைக் காட்டிலும், இவர்கள் உட்காரும் நாற்காலியிலிந்து வெறும் 30 வினாடிக்குள் சர்வ சாதாரணமாக தொய்வின்றி எழும்ப முடிவதாக தெரியவந்துள்ளது.

எனவே, ஐம்பதிலும் ஆரோக்கியமாக இருக்க உடல் நலத்தின் மீது இப்போதிலிருந்தே அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகும்.

Post a Comment

0 Comments